சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர் வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” “தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்” […]
