மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய மணப்பெண் முகம்! அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை..


 மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. 

ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ளகடந்த வாரம் அவர்கள் 2 பேருக்குமே நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது

திருமணம் 2-ந் திகததி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில் அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மேக்கப் போட முடிவு செய்தார்.
இதற்காக அழகு நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்தார்.  

மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய மணப்பெண் முகம்! அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை.. | Uddenly Swelled When She Put On Makeup

புதுவித மேக்கப்  

திருமணத்திற்கு 2 நாட்கள் இருப்பதால் புதிய யுக்தியை பயன்படுத்தி வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் தன்னுடைய விருப்பத்தை அழகு கலைநிபுணரிடம் கங்காவிடம் சொல்லியுள்ளார். 

 உடனே கங்கா, தான் புதிய வகையிலான மேக்கப் முறையை கற்றுக்கொண்டுள்ளதாகவும், அதை இப்போது முயற்சி செய்கிறேன் என்றும் சொல்லி கூறியதால் புதிய வகை மேக்கப் போட மணப்பெண் அனுமதித்துள்ளார். 

திடீரென வீங்கி முகம்

அதன் பின் முதலில் மணப்பெண் முகத்தில் புதிய வகை கிரீமை வைத்து தேய்த்துள்ளார்.

அதற்கு பிறகு, முகத்தை மூடி சுடு தண்ணீராலான நீராவியில் ‘ஸ்டீம்’ செய்துள்ளனர்.

வெந்நீரில் ஆவி கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணின் முகம் திடீரென கருமை நிறமாக மாறியது.

ஆவி முகத்தில் பட்டதுமே, அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது.. இதனால் முகம் வெந்து தீக்காயங்கள் போன்ற கொப்புளங்கள் வந்துவிட்டன. அடுத்து, கண்களும், கன்னமும் சிவப்பு நிறத்தில் வீங்கியது. 

மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய மணப்பெண் முகம்! அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை.. | Uddenly Swelled When She Put On Makeup

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

மணப்பெண்ணின் முகம் கருப்பு நிறத்தில் மாறிவிட்டதால் மாப்பிள்ளை கல்யாணம் வேண்டாம் என்ற சொல்லிவிட்டாராம். இதைக்கேட்டதுமே மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மேலும் அதிர்ந்து போனார்கள்.  

 இதனால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணமும் நின்றுவிட்டது. 

இதையடுத்து மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய மணப்பெண் முகம்! அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை.. | Uddenly Swelled When She Put On Makeup 

வழக்கு பதிவு செய்து விசாரணை

மேலும் ஆத்திரமடைந்த மணமகளின் குடும்பத்தினர் கங்கா மீது புகார் கொடுத்துள்ளார். இதற்கமைய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.