Vadivelu: அன்னைக்கே வடிவேலு கதையை முடிச்சிருப்பேன்… பிரபல காமெடி நடிகர் ஆவேசம்!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. தன்னைத்தானே டேமேஜ் செய்து கொண்டு பிறரை சிரிக்க வைப்பார் வடிவேலு. அதோடு அவரது காமெடிகள் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்கும் இதனாலேயே வடிவேலுவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமான வடிவேலுவின் காமெடிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

Pathu Thala: பத்து தல படத்தில் ஆர்யா பொண்டாட்டி… இதை எதிர்பார்க்கலயே!

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தயாரித்த 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் படங்களில் நடிக்க ரெட் கார்டு கொடுத்து தடை விதித்திருந்தது. இதனால் கடந்த பத்தாண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும், தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாகவும் கூறி கலங்கி வந்தார் வடிவேலு.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் வடிவேலு. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் வடிவேலு. ஆனால் அந்த படம் பெரும் ஃபிளாப் ஆனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து சக நடிகர் நடிகைகள் நெகட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Pallu Padama Paathuka Review: பல்லு படாம பாத்துக்க… படம் எப்படி? ஆடியன்ஸ் விமர்சனம்!

அந்த வகையில் நகைச்சுவை நடிகரான சிசர் மனோகர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகர் வடிவேலு குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். தான் ராஜ்கிரண் புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தில்தான் ஆரம்பத்தில் வேலை பார்த்ததாகவும், அங்குதான் நடிகர் வடிவேலுவும் வேலைக்கு சேர்ந்தார் என்று கூறிள்ளார். ராசாவின் மனசிலே படத்தின் ஷூட்டிங்கின் போது வடிவேலு வேலைக்கு சேர்ந்தார்.

அந்த படத்தில் கடைசியாக காமெடி ட்ராக் எடுத்துள்ளார்கள். அப்போது ஒரு காட்சியில் வடிவேலுவை நடிக்க வைத்தார்கள். ஆனால் அது கவுண்டமணி சாருக்கு பிடிக்கவில்லை. ராஜ்கிரணை அழைத்து சத்தம்போட்டார். பின்னர் ராஜ்கிரண் ஒரே ஒரு காட்சிதான் அண்ணே, அனுப்பிடலாம் என சமாதானப்படுத்தினார். பின்னர் வடிவேலுவை கவுண்டமணி மிதிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

Nayanthara: சும்மா கிளப்பி விடாதீங்க… அந்த பேச்சுக்கே இடமில்ல.. கொதிக்கும் நயன்தாரா ரசிகர்கள்!

இதில் கவுண்டமணி சார் கடுப்பில் வடிவேலுவை நிஜமாகவே மிதித்தார். இதை சொல்லி வருத்தப்பட்டார் வடிவேலு. ஆரம்பக் காலத்தில் வடிவேலுவுக்கு நான் பல உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால் அந்த உதவிகளை எல்லாம் வடிவேலு மறந்துவிட்டார் என கூறியுள்ளார் சிசர் மனோகர். மாறாக தனக்கு வந்த வாய்ப்புகளையும் தட்டிப்பறித்து அவருக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்தார் என்றும் தனக்கு வந்த வாய்ப்புகளை தடுத்து கெடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

பகவதி படத்தில் தான் நடிக்க வேண்டியதை கெடுத்தது வடிவேலுதான் என்றும், எனக்கு மட்டும் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் அன்றே அவரது கதையை முடித்திருப்பேன் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். சீமான் தான் தன்னை அழைத்து சமாதானப்படுத்தியதாகவும், ஏன் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை வடிவேல் தட்டிப்பறித்தார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Shahrukh khan: சூப்பர் ஸ்டார் வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவன் சார்தான் தன்னை நடிக்க அழைத்ததாகவும் தனக்கு இளவரசன் கதாப்பாத்திரம் என்று கூறியதாகவும் தெரிவித்த சிசர் மனோகர் தன்னுடைய 11 காட்சிகளை 3 காட்சிகளாக குறைத்தது வடிவேலுதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அந்தப் படம் இயக்குநர் சொன்னது போல் வந்திருந்தால், தன்னுடைய வாழ்க்கை மாறியிருக்கும் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார் சிசர் மனோகர். வடிவேலு மீது அடுத்தடுத்து பிரபலங்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.