வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும் என அமெரிக்க விமான நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடில்லி விமான நிலையத்திற்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று(மார்ச் 04) புறப்பட்டது. அந்த விமானத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும், ஆரியா (வயது 21) என்ற இந்திய மாணவர் பயணித்து உள்ளார். குடிபோதையில் இருந்த மாணவர், விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்து உள்ளார். தொடர்ந்து விமானம் நேற்று இரவு 9.50 மணியளவில் பாதுகாப்பாக டில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

இது குறித்து அமெரிக்க எர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில், பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் குடிப்போதையில் இருக்கையில் அமராமல் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை விமானத்தில் பறக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.
சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சங்கர் மிஷ்ரா என்பவர், குடிபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement