ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே கே நகர் 14வது செக்டார் பகுதியயை சேர்ந்தவர் சுரேஷ் இவர் தனது மனைவி ராதா இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார், மேலும் சுரேஷ் வடபழனி பகுதியில் அச்சு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுரேஷ் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்,
ஆனால் நள்ளிரவு கடந்தும் சுரேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ராதா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் சுரேஷ் வீட்டில் வைத்துச் சென்ற தான் அவரது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் தோற்று விட்டதாகவும் அதனால் வாழ தகுதியற்றவன் தற்கொலை செய்தல் கொள்ளப் போகிறேன் என கடிதம் ஒன்று எழுதி அதை புகைப்படம் எடுத்து செல்போனில் வைத்து சென்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து சுரேஷின் மனைவி ராதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சம் ரூபாய் வரை சுரேஷ் இழந்திருப்பதாக தெரிவித்தார் இதனை அடுத்து சுரேஷின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
நேற்று தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் வினோத்குமார் என்கிற இளைஞர் ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேல்மரு இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தோற்று வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.