சினிமாவை விட சீரியல் தான் செட்டாகும்! திருச்செல்வத்துக்கு ரசிகர்களின் அன்பு வேண்டுகோள்

சின்னத்திரை இயக்குநரான திருச்செல்வம் தமிழில் பல நல்ல சீரியல்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் 'கோலங்கள்' மற்றும் தற்போது ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' ஆகிய தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. இயக்குநர் சமுத்திரகனி, திருமுருகன், திருச்செல்வம் ஆகியோர் அனைவரும் சமகாலத்தில் சின்னத்திரையில் இயங்கி கொண்டிருந்தார்கள். இதில் சமுத்திரகனி உள்ளிட்ட சிலர் சினிமா வாய்ப்புகள் கிடைத்ததும் சின்னத்திரையை விட்டு விலகிவிட்டனர். ஆனால், திருச்செல்வமோ சினிமா வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், 'கோலங்கள் தொடர் நன்றாக சென்றுகொண்டிருந்த போது எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நான் இயக்கி நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும் சீரியலை விட்டு விலக எனக்கு மனமில்லை. எனவே, அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டடேன்' என்று கூறியுள்ளார்.

தற்போது திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரும் பல தரப்பு மக்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாய்ஸ் ஹாஸ்டலில் கூட எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர். கோலங்கள் தொடரில் 400 எபிசோடுகளில் கிடைத்த புகழ் 150 எபிசோடுகளிலேயே தனக்கு கிடைத்துவிட்டதாக திருச்செல்வம் ஒருமுறை கூறியிருந்தார். இதைகுறிப்பிட்டு திருச்செல்வத்துக்கு சினிமாவை காட்டிலும் சீரியலே சிறப்பானதொரு களமாக இருக்கிறது என ரசிகர்கள் அவரை மோட்டிவேட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.