கத்தாரில் 25 ஆண்டுகளாக வசிக்கும் இந்தியர் ஒருவர் துபாயின் டூட்டி ஃப்ரீ லொட்டரியில் 1 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வென்றார்.
ரூ.8.2 கோடி பரிசு
கத்தாரின் தலைநகர் தோஹாவில் வசிக்கும் இந்திய நாட்டவர் மார்ச் 4, சனிக்கிழமை மாலை டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் இறுதிப் போட்டியின் பரிசு வழங்கும் விழாவிற்குப் பிறகு நடந்த சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிராவில் $1 மில்லியன் வென்றார். இது இந்திய பணமதிப்பில் ரூ.8.2 கோடியாகும்.
துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev), லொட்டரி குலுக்கலில் வெற்றியாளருக்கான டிக்கெட்டை எடுத்தார்.
Image Courtesy: DDF/2.8 Pro/Jorge Ferrari
கத்தாரில் வசிக்கும் இந்தியர்
இந்த பரிசை வென்ற 55 வயதான அப்துல் ரவூப் முல்லாலி குன்னோந்தகத் (Abdul Rauf Mullali Kunnontakath), பிப்ரவரி 16 அன்று மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 416-ல் ஆன்லைனில் வாங்கிய 1771 என்ற டிக்கெட்டின் மூலம் கோடீஸ்வரரானார்.
25 ஆண்டுகளாக தோஹாவில் வசிக்கும் அப்துல் ரவூப், 2018-ஆம் ஆண்டு முதல் துபாய் டூட்டி ஃப்ரீயின் லொட்டரியில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் தோஹாவில் ஒரு கட்டிடப் பராமரிப்புக்காக நிதி மேலாளராகப் பணிபுரிகிறார்.
இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரவூப், 1999-ல் மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதிலிருந்து $1 மில்லியன் வென்ற 207வது இந்தியப் பிரஜை ஆவார். துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.