நடிகர் மோகன் பாபுவின் எதிர்ப்பை மீறி 2வது திருமணம் செய்து கொண்டாரா அவரது மகன் மஞ்சு மனோஜ்?

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர். இவருடைய மகன் மஞ்சு மனோஜ் பிரபல நடிகராக இருக்கிறார். அவருக்கும் ஆந்திராவில் முன்னாள் அமைச்சராக இருந்த பூமா ரெட்டியின் மகளுக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

இவர்கள் திருமணத்தை சுற்றிய சர்ச்சை தகவல் ஒன்று உலாவிக் கொண்டிருந்த நிலையில் அது இப்போது வதந்தி என நிரூபணமாகியுள்ளது. மோகன் பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு மனோஜூக்கு 2015 ஆம் ஆண்டு பிரணிதா ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை சுமூகமாக நீடிக்கவில்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து மஞ்சு மனோஜூக்கும், ஆந்திராவின் மறைந்த முன்னாள் அமைச்சரான பூமா நாகிரெட்டியின் மகள் பூமா மௌனிக்காவுக்கும் காதல் மலர்ந்தது. இவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இவருக்கும் இடையிலான காதல் குடும்பத்தினருக்கு தெரியவரும்போது நடிகர் மோகன் பாபு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பூமாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்திருக்கிறார் நடிகர் மஞ்சு மனோஜ். தன்னுடைய எதிர்ப்பை மீறி திருமணம் நடைபெறுவதால், அதில் நடிகர் மோகன்பாபு கலந்து கொள்ளமாட்டர் என கூறப்பட்டது. இந்த செய்திதான் இப்போது வதந்தியாக மாறியுள்ளது. ஏனென்றால் மகன் மஞ்சு மனோஜின் திருமணத்தில் நடிகர் மோகன் பாபு ஒரு தந்தையாக முன்னணியில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்ததுடன், மணமக்களையும் வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார். மேலும், திருமணத்திற்கு வந்திருந்த திரை மற்றும் அரசியல் பிரபலங்களையும் வரவேற்று உபசரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.