லாத்தூர்: மகாராஷ்டிராவின் லத்தூரில் முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலின் வீடு உள்ளது.அமைச்சரின் உறவினரான ஹனுமந்த்ராவ் பாட்டீல்(81) நேற்று காலை ஷிவ்ராஜ் பாட்டீலின் வீட்டிற்கு வந்தார். அங்கு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அமைச்சரின் மகன் வீட்டில் இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறிய போது, “ ஹனுமந்த்ராவ் பாட்டீல் கடந்த சில ஆண்டுகளாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரிக்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தனர்.