வினோத காதல்… மருமகளுடன் மாமனார் ஓட்டம்: ராஜஸ்தானில் தொடரும் அவலம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பந்தி மாவட்டத்தில் சிலார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பவன் வைராகி. இவரது தந்தை ரமேஷ் வைராகி. பவனுக்கு திருமணம் நடந்து அந்த தம்பதிக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மகனின் மனைவி மீது ரமேசுக்கு ஓரப்பார்வை இருந்து உள்ளது. இதனால், அவரிடம் பேசி, பேசி தன்பக்கம் ஈர்த்து விட்டார். பவனின் மனைவியும், மாமனாரின் பேச்சை கேட்டு மயங்கி விட்டார்.

இந்த சூழலில், சதர் காவல் நிலையத்தில் பவன் வைராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், பிறந்து 6 மாதம் ஆன தனது மகளையும், தன்னையும் தனியாக விட்டு விட்டு, தந்தை ரமேசுடன் மனைவி ஓடி விட்டார்.

ஒன்றுமறியாத அப்பாவியான தனது மனைவியை வசீகரித்து இழுத்து சென்று விட்டார். எப்படி தனது மனைவியை தன்வசப்படுத்தினார் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம், அவரது வற்புறுத்தல் இல்லாமல் தனது மனைவி இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார் என புகாரில் தெரிவித்து உள்ளார்.

ஒரு வேலையாக, பவன் பக்கத்து கிராமத்திற்கு சென்று தங்கி இருக்க வேண்டி இருந்து உள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என கூறப்படுகிறது. அந்த புகாரில், தனது தந்தை ரமேஷ் சட்டவிரோத வேலையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தன்னுடைய இரு சக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்று விட்டார் என தெரிவித்து உள்ளார்.

போலீசாரும், இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தவில்லை என பவன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஆனால் இதனை மறுத்த போலீசார், ரகசிய திருமணம் செய்ய ஓடிப்போன அந்த ஜோடியையும், திருடு போன இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றையும் நாங்கள், கண்டறியும் தீவிர முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் எங்கே? என தேடி வருகிறோம். ஆனால், அவர்கள் இன்னும் சிக்கவில்லை என கூறியுள்ளனர்.

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் இதேபோன்று மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. அதில், தனது மருமகன் மீது காதல் கொண்ட 40 வயது மாமியார், அவருடன் ஓடி விட்டார். போகும் முன்பு, அந்த மாமியார் தனது கணவருக்கு மதுவை குடிக்க வைத்து போதை ஏற்படுத்தி விட்டு பின்னரே, மருமகனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.