பிரித்தானியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கார் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்
கடந்த 4ஆம் திகதி லங்காஷைரின் சாம்லெஸ்பரிக்கு அருகில் Ford Fiesta என்ற கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் காரை ஓட்டிய அலெக்ஸ் டைசன் (19) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார், குறித்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது 88 மைல் வேகத்தில் காரை இயக்கிய அலெக்ஸ், வேண்டுமென்றே தடையை குறிவைத்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது.
@MEN Media
காதலிக்கு கடைசி குறுஞ்செய்தி
மேலும், அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது காதலிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், ‘நான் உன்னை காதலிக்கிறேன், அதனை எப்போதும் செய்வேன்…நான் மோட்டார் பாதையில் இருக்கிறேன்…அடுத்த ஜென்மத்தில் சிந்திப்போம், விடைபெறுகிறேன்’ என கூறியிருந்தார்.
காதலியுடனான ஊடல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. முந்தைய நாள் இரவு அலெக்ஸ் தனது காதலியை தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்துள்ளார்.
அலெக்ஸின் தந்தையான டைசன் கூறும்போது, அவருக்கு வாழ்வதற்கு நிறைய இருக்கிறது என்றும், வாழ்வை நேசித்த அவர் தனது பயிற்சியை முடிக்க மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்த முடிவை எடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
@MEN Media