பலுசிஸ்தானில் ஒரு ‘புல்வாமா’ தாக்குதல்! 9 போலீசார் படுகொலை! 13 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மீண்டும் குண்டுவெடிப்பால் அதிர்ந்துள்ளது. போலீஸ் குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மொத்தம் 9 போலீசார் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி சம்பவத்தை அடுத்து, வெடிகுண்டு செயலிழக்கப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தற்போது எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குவெட்டா-சிபி நெடுஞ்சாலையில் காம்ப்ரி பாலத்தில் பலுசிஸ்தான் காவலர்களை ஏற்றிச் சென்ற டிரக் அருகே வெடிப்பு ஏற்பட்டது. இது தற்கொலைத் தாக்குதல் என்று முதற்கட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று கச்சி மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மெஹ்மூத் நோட்டாய் கூறினார். எனினும், அது என்ன வகையான வெடிப்பு என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் பாகிஸ்தான் காவல் துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 உஷார் நிலையில் உள்ள நிர்வாகம்

வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், வெடிவிபத்தை தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார். வெடிகுண்டு தாக்குதலில் பலுசிஸ்தான் கான்ஸ்டாபுலரியி என்னும் காவல் பிரிவின் குறைந்தது ஒன்பது பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் நோட்டாய் கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் நிர்வாகமும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மேலும் படிக்க | கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பலுசிஸ்தான் கான்ஸ்டபுலரி காவல் பணியாளர்கள் சிபி மேளாவில் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்தின் தீவிரத்தால் லாரி கவிழ்ந்தது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் கான்ஸ்டாபுலரி என்பது மாகாண காவல்துறையின் ஒரு பிரிவு ஆகும். இது முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சிறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.