பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி செய்ததாக 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொள்வார்கள். அண்மையில் கூட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடந்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் சிலர் பிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் சோதனையிலும் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் நான்கு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தக்ஷின கன்னடா மாவட்டத்தில் அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.
அதில் முகமது, இக்பால், நவாஸ், நௌஃபல் ஆகிய நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் பீகாரில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் குண்டு வைக்க நிதியுதவி செய்தவர்கள் என்று என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.
newstm.in