பெங்களூரு: ‘டெண்டர்’ வழங்கும் விவகாரத்தில், கைது பீதியை எதிர் கொண்டுள்ள எம்.எல்.ஏ., மாடால் விருபாக்ஷப்பா செயலால், பா.ஜ., தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது. இதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின், கர்நாடக வருகை தள்ளி வைக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மார்ச் 12ல் தாவணகெரே, ஹொன்னாளிக்கு வருகை தரவிருந்தார். முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா, பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் துவக்க விழா, ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அமித்ஷா முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில், 1 லட்சம் தொண்டர்களை சேர்க்க, பா.ஜ., தயாராகி வந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட, பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருந்தனர்.
ஆனால் லஞ்ச வழக்கில், தாவணகெரே பா.ஜ., – எம்.எல்.ஏ., மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் உட்பட சிலர் கைதாகினர்.
எம்.எல்.ஏ.,வும் கைது பயத்தால் தலைமறைவாக இருக்கிறார்.அவரை கைது செய்ய, லோக் ஆயுக்தா வலை விரித்துள்ளது.
இச்சூழ்நிலையில், அமித்ஷா தாவணகெரேவுக்கு வந்தால், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடும். இதை மனதில் கொண்டு, அவரது வருகையை ரத்து செய்துள்ளனர். நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement