பாஜக கட்சியின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார்.  இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார். சில தினங்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று அறிக்கையில் குறிப்பிட்டார். பின்பு சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மறுபுறம் பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.  இப்படி அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் விலகிய நிலையில், இன்று காலை முதல் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் ஒரு போலி அறிக்கை உலா வர தொடங்கியது.  

அந்த அறிக்கையில், சவுக்கு சங்கர் தமிழக பாஜகவின் IT-Wing தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. சமீபத்தில் சிறைக்கு சென்று வந்த சவுக்கு சங்கருக்கு பாஜக தான் ஆதரவு அளித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.  இதனால் இந்த செய்தியினை பலரும் நம்ப தொடங்கினர்.  பின்பு இது போலியானது என்றும், சவுக்கு சங்கருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.  யார் இந்த வதந்தியை பரப்பினார்கள் என்று பாஜக கட்சி பொறுப்பாளர்கள் குழம்பி போய் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.