Ajith: அதனாலதான் அஜித்தை எல்லாருக்கும் பிடிச்சுருக்கு… மனம் திறந்த காதல் மன்னன் நடிகை!

நடிகர் அஜித் குறித்து பிரபலங்கள் பலரும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி நடிகர் அஜித் பிறருக்கு உதவும் மனம் கொண்டவர், அனைவரையும் நேசிக்க தெரிந்தவர், அனைவருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். தலைக்கனம் இல்லாதவர் என அஜித் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் காதல் மன்னன் படத்தின் ஹீரோயினான மானு அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அசாமை பூர்விகமாக கொண்டவர் நடிகை மானு. டான்சரான மானு மணிப்பூரி, கதக் மற்றும் பரதநாட்டியம் கற்றுத் தேர்ர்ந்தவர். தமிழ் சினிமாவில் 1998ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன் படத்தில் நடித்தார் மானு.

இந்தப் படத்தில் தவிப்பு, காதல், பாசம், கோபம் என அனைத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். காதல் மன்னன் படத்திற்கு பிறகு 2014ஆம் ஆண்டு வெளியான என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்தார் மானு. இந்நிலையில் காதல் மன்னன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் மானு, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகர் அஜித் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மானு. அதில் காதல் மன்னன் படத்தில் அஜித் போன்ற ஒரு நடிகரோடு இணைந்து பணியாற்றியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.

மேலும் காதல் மன்னன் படம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுவதற்கு மொத்த காரணமும் படக்குழுதான் என்று கூறியுள்ள மானு, அஜித் சிறந்த நடிகர், ரொம்பவே எளிமையானவர் என புகழாரம் சூட்டியுள்ளார். காதல் மன்னன் படப்பிடிப்பின் போது தான் எப்போதும் அஜித்தின் பெற்றோருடன் தான் இருப்பேன் என்றும் மானு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

காதல் மன்னன் தன்னுடைய முதல் படம் என்பதால் தான் பயப்படாத அளவுக்கு அஜித் தன்னை பார்த்துக் கொண்டார் என்றும் நடிகை மானு கூறியுள்ளார். அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று கூறியுள்ள மானு அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அஜித் குறித்து மானு பேசியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.