அக்கா இறந்த சில நாட்களில் தங்கைக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சியில் பிரித்தானியக் குடும்பம்


பிரித்தானியாவில், அக்கா இறந்த சில நாட்களில் தங்கையும் உயிரிழந்த துயர சம்பவம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

ஒரு மகள் இறந்த துக்கம் ஆறுவதற்குள்… 

ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்கில், கடந்த மாதம் 12ஆம் திகதி Shaunie Thomson (26) என்னும் இளம்பெண் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Shaunieஇன் மரணச் செய்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டார் அவரது தங்கையான Shavanna Thomson (21). இந்நிலையில், இம்மாதம், அதாவது மார்ச் 3ஆம் திகதி Shavannaவும் உயிரிழந்துவிட்டார்.

இருவரும் எதனால் மரணமடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர்கள் மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அக்கா இறந்த சில நாட்களில் தங்கைக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சியில் பிரித்தானியக் குடும்பம் | Sister S Tragedy Days After Sister S Death

Credit: Facebook

தற்போது, இரண்டு சகோதரிகளின் இறுதிச்சடங்குகளையும் சேர்த்து நடத்துவதென அவர்களுடைய உறவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

அடுத்தடுத்து வாலிப வயதில் இரு பிள்ளைகளை பறிகொடுத்த அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது. 

அக்கா இறந்த சில நாட்களில் தங்கைக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சியில் பிரித்தானியக் குடும்பம் | Sister S Tragedy Days After Sister S Death

Credit: Go Fund Me



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.