வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி நியமனம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
![]() |
இந்நிலையில் இரிக் கார்சிட்டி தூதராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரிக் கார்சிட்டி முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆவார். முன்னதாக இவரது பெயரை கடந்த 2021-ம் ஆண்டே அதிபர் ஜோபைடன் தேர்வு செய்தார். இரிக் கார்சிட்டி மீது மேயர் அலுவலக பெண் பாலியல் புகார் கூறிய சர்ச்சையில் சிக்கியதால் தாமதமானது.
இந்நிலையில் ஒட்டெடுப்பில் தேர்வானால், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement