இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு


இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தை லிலிபெட்டுக்கு தனிப்பட்ட முறையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த விழாவானது அமெரிக்காவில் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சார்லஸ் மன்னர்

கடந்த வாரம் நடந்த இந்த விழாவில் இளவரசர் வில்லியம் குடும்பம் மற்றும் சார்லஸ் மன்னர் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு | Harry Daughter Lilibet Christened

@getty

மார்ச் 3ம் திகதி நடந்த இந்த திருமுழுக்கு விழாவில் சுமார் 25 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆனால் இளவரசர் வில்லியம் குடும்பம், மன்னர் சார்லஸ் குடும்பம் என எவரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.

மேகன் மெர்க்கலின் தாயார் உட்பட நெருங்கிய நண்பர்கள் 20ல் இருந்து 30 பேர்கள் வரையில் பங்கேற்றுள்ளனர்.
விருந்து உபசாரங்களுக்கு பின்னர் நடனமாடி மகிழ்ந்ததாகவும், மாலைப் பொழுதை கொண்டாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு | Harry Daughter Lilibet Christened

Credit: Alexi Lubomirski

இந்த விழாவிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பேராயர் ஜான் டெய்லர் தலைமை ஏற்று சிறப்பித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.