குடிபோதையில் பெண்களோடு மோசமாக நடனமாடிய பிரபல கால்பந்து வீரர்: துஷ்பிரயோக வழக்கு!


இங்கிலாந்து அணியின் கால் பந்து வீரர் கைல் வாக்கர் மது போதையில் பெண்களை ஆத்திரமூட்டும் வகையில் மோசமாக நடனமாடிய சீசீடீவி வீடியோ  இணையத்தில் வைரலாகியுள்ளது.

குடித்து விட்டு நடனம்

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கைல் வாக்கர் என்பவர், கடந்த மார்ச் 5 ஆம் திகதி அளவுக்கு அதிகமான குடிபோதையில், இரண்டு பெண்களைச் சீண்டி ஆத்திரமூட்டும் வகையில் நடனமாடியிருக்கும், சீசீடிவி வீடியோ இணையத்தில்  ட்ரண்டிங் ஆகியுள்ளது.

குடிபோதையில் பெண்களோடு மோசமாக நடனமாடிய பிரபல கால்பந்து வீரர்: துஷ்பிரயோக வழக்கு! | Man City Player Drunk And Dirty Dance In Bar@gettyimages

மான்செஸ்டரிலுள்ள ஒரு பாரில் தனது தோழிகளோடு வந்த கைல் வாக்கர் சுமார் 90 நிமிடம் பாரில் சுற்றி அங்கிருந்த பெண்களோடு  போதையில் மோசமாக நடனமாடியுள்ளார்.

மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சில சேட்டைகளைச் செய்துள்ளார். இந்த காணொளி காட்சிகள் காவல் துறைக்கு கிடைத்துள்ளது.

துஷ்பிரயோக வழக்கு

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

இது பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறை அதிகாரி மேலும் இதுபோல செயல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவித்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் எனக் கூறியுள்ளார்.

குடிபோதையில் பெண்களோடு மோசமாக நடனமாடிய பிரபல கால்பந்து வீரர்: துஷ்பிரயோக வழக்கு! | Man City Player Drunk And Dirty Dance In Bar@Eamonn and James Clarke

பெண்களைச் சீண்டும் வகையில் அவர் செய்த செயல்கள் காணொளியில் பதிவாகியுள்ளதால் 2003 துஷ்பிரயோக சட்டத்தின் படி அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் மென் சிட்டி அணியின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான இவருக்கு அன்னி கில்னர் என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.