பல்லியா: உத்தரபிரதேசத்தில் சாதியை போற்றும் வகையில் பாடல் பட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போஜ்புரி நடிகர் பவன் சிங் மற்றும் பாடகி ஷில்பி ராஜ் ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் நடந்த தனியார் கச்சேரி விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் திரைப்படப் பாடல்களை சேர்ந்து பாடினர். கூட்டத்தில் இருந்த சிலர், குறிப்பிட்ட சாதியினரை போற்றும் வகையிலான பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த குறிப்பிடப் பாடலை பாட பவன் சிங் மறுத்துவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்த சிலர் பவன் சிங்கை நோக்கி கற்களை வீசினர். அந்த கல் அவர் மீது பட்டதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென விழா மேடை வன்முறை களமாக மாறியதால், விழாவிற்கு வந்தவர்கள் சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், மேடையில் இருந்து பிரபலங்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளதால், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.