
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது.நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் “விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு” என்பதை குறிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே இந்த விருந்து.
அப்போது, கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும். வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இந்த பழங்குடியின மக்களிடம் உள்ளது.

ஒருவேளை விருந்தினர்கள் கணவன் மனைவியாக வந்தால், இருவரும் பரஸ்பரம் விரும்பினால் அன்று ஒரு நாள் இரவுக்கு மட்டும் மனைவியை மாற்றிக்கொள்வார்களாம். இந்த பழங்குடியின பெண்கள் இதை விரும்பி செய்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.
இது மட்டுமல்ல சில நேரம் மனைவியின் தோழிகளையே மனைவிகள் தன் கணவனுடன் ஒன்றாக இருக்க அனுப்பி வைக்கிறார்களாம். இப்படியாக தன் தோழியின் கணவனை சந்தோஷப்படுத்துவதால் தன் தோழியுடன் உள்ள நட்பின் ஆழத்தை உணர்த்தும் செயலாக பார்க்கின்றனர்.

ஆனால், மனைவி வேறு நபருடன் உடலுறவு கொள்வதை முடியாது என சொல்லாம். விருந்தினருடன் உல்லாசமாக இருக்க மாட்டேன் எனக் கூறலாம், ஆனால் விருந்தினர் வந்தால் அவருடன் தான் ரூமில் இருக்க வேண்டும். இந்த கலாச்சாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.