சுற்றுலா அவுஸ்திரேலிய அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதியும் நான்காவதுமான போட்டி தற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் இன்று (09) ஆரம்பமானது.
இந்த போட்டித்தொடரில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ் போட்டிகளிலும் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலிய பிரதமர்; பிரதமர் மோடி இணைந்து பார்த்து வருகிறார். அவரது வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களை தலைவர் ரோகித் சர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். பிரதமர் மோடி வீரர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான நாணய சுழற்சி இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.
இதுவரை 24 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்களை எடுத்துள்ளது.