ஆண் எம்பி-க்கு மகளிர் தின வாழ்த்து.. நடிகை கஸ்தூரியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

பெண்கள் உரிமையை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றும் (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர். இந்த நிலையில், திமுகவின் ஆண் பிரமுகருக்கு மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்த நடிகை கஸ்தூரியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினருக்கு நடிகை கஸ்தூரிக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் இருந்து வருகிறது. அண்மையில் கூட வட மாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்டியிருந்தார். அதில், ”வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இது திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரை தாக்கி பேசியிருப்பதாக திமுகவினர் கொந்தளித்தனர். இவ்வாறு கஸ்தூரி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை சங்கி என்றும் சாதியை குறிப்பிட்டும் திமுகவை சேர்ந்தவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை திமுக எம்பி எம்எம் அப்துல்லாவுக்கு நடிகை கஸ்தூரி நேற்று மகளிர் தினம் வாழ்த்து கூறி கிண்டலடித்துள்ளார். இதனால் கடுமையான விமர்சனங்களை பெற்று கஸ்தூரியை நெட்டிசன்கள் ‘ இதெல்லாம் டூ மச்” என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

எம்பி எம்எம் அப்துல்லா பதிலடி

இதற்கிடையே, எம்பி எம்எம் அப்துல்லா நடிகை கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்து ட்வீட்டியிருந்தார். அதில் அவர், ” நான் ஒரு பெண்ணாம்! அதனால் எனக்கு பெண்கள் தின வாழ்த்து சொல்கிறாராம்!! பெண் என்றால் கேவலம் என்று நினைப்பவன் நான் அல்ல.. அதனால் உங்கள் வாழ்த்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் அம்மா பாட்டி அனைவருக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துகள்” என இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரிக்கும், திமுக எம்பிக்கும் என்ன வாய்க்கா தகராறு என்பது தெரியவில்லை. தொடர்ந்து திமுகவினரை டார்கெட் செய்து வரும் நடிகை கஸ்தூரி மகளிர் தினத்தன்று எம்பியை டார்கெட் செய்திருப்பது கவனம் பெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும் பெண் உரிமையை குறித்தும் அடிக்கடி குரல் எழுப்பி வரும் நடிகை கஸ்தூரி, ஒரு ஆண் எம்பிக்கு மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்து, அவரே பெண்களை எந்த இடத்தில் வைத்து பார்க்கிறார் பாருங்கள் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.