வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க உளவுத்துறை கூறியிருப்பதாவது:
இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம். இந்திய எல்லை பிரச்னைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு உளவுத்துறை எங்களிடம் கூறியது. அணு ஆயுதம் ஏந்திய இரு நாடுகளுக்கு இடையே போர் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான நெருக்கடிகள் அதிகமாகும். இது கவலைக்குரிய விஷயமாகும்.

சவால்களை சமாளிக்க கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, கடந்த நாட்களை விட தற்போது சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் சீனா, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு
இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். இவ்வாறு அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement