இலங்கை ஜாம்பவானின் சாதனையை அடித்து நொறுக்கிய ஏஞ்சலோ மேத்யூஸ்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஏஞ்செலோ மேத்யூஸ்/Angelo Mathews

@Photosport

ஜெயசூர்யாவை முந்திய ஏஞ்செலோ மேத்யூஸ்

அவர் தன் ஸ்கோர் மூலம் 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவை அவர் பின்னுக்குத் தள்ளினார்.

ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ஓட்டங்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சனத் ஜெயசூர்யா/Sanath Jayasurya

@Facebook

ஏஞ்சலோ மேத்யூஸ் தனது ஸ்கோரில் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.    

ஏஞ்செலோ மேத்யூஸ்/Angelo Mathews

Twitter@ICC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.