சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.