என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள்., போலீசிடம் தஞ்சம் அடைந்த 'வாழும் இயேசு'


கென்யாவில் ‘வாழும் இயேசு’ என தன்னை கூறிக்கொண்டிருக்கும் நபர், இப்போது தனது உயிருக்கு ஆபத்து என கூறிக்கொண்டு காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வாழும் இயேசு’

கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்த கிருத்துவ மத போதகர் எலியுட் வெகேசா (Eliud Wekesa). இவர் தன்னைத் தானே இயேசு வா டோங்கரென் (Yesu Wa Tongaren) எனக் கூறி வந்துள்ளார். அதாவது வாழவும் இயேசு என அர்த்தம்.

20 வயதில் திருமணம் செய்து கொண்ட அவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். 2009-ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த சண்டையில் எலியுட் வெகேசாவின் தலையில் பலமான காயம் ஏற்பட்டு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

அதையடுத்து, தன்னை வாழும் ஏசு எனக் கூறிக்கொண்டு மதப்பிரச்சாரத்தில் இறங்கினார். தனது டோங்கரேன் வா இயேசு என மாற்றிக் கொண்டார்.

என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள்., போலீசிடம் தஞ்சம் அடைந்த homekazi

அவரது மனைவி ஒருபக்கம், வாழும் ஏசுவாகிய தனது கணவர் தண்ணீரை தேனீராக மாற்றியதாகவும், அதைக் கிராம மக்கள் அனைவரும் குடித்தனர் என்றும் வாழும் ஏசுவின் அற்புதத்திற்கு சாட்சி கூறியிருக்கிறார்.

புனிதத்தை நிரூபிக்க சவால்

இவர்களது பித்தலாட்டத்தால் ஆத்திரமடைந்த ஒருவர் உண்மையில் அவர் வாழும் ஏசு என்றால் சிலுவையில் மறித்து மூன்றாம் நாள் உயிருடன் வந்து நிரூபியுங்கள் என சமூக ஊடகத்தில் சவால் விட்டுள்ளார்.

என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள்., போலீசிடம் தஞ்சம் அடைந்த Twitter@AdvoBarryRoux

இயேசுவின் கடவுள் தன்மை எப்படி பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதோ, அதே போல் வாழும் இயேசுவின் புனிதத்தையும் நிரூபிக்க வேண்டும் என மற்றொருவர் பதிவிட்டிருக்கிறார்.

இதனால் கதிகலங்கிப்போன எலியுட் வெகேசா, தன்னை சிலுவையில் அறையக் கூடாது. அப்படி செய்தால் அது உலகிற்குத்தான் பிரச்சனை. மக்களுக்குத்தான் பிரச்சனை, மக்களை காக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் உச்சக்கட்ட பயத்தில், காவல்துறையிடம் தஞ்சமடைந்துள்ளார் எலியுட் வெகேசா. மக்கள் தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல துடிக்கிறார்கள் என்றும், எனவே தன் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றும் வெகேசா காவல்துறையிடம் முறையிட்டிருக்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.