மும்பை, மும்பை கடற் பகுதி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மூன்று பேரையும் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை கடற்கரை அருகே இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் வழக்கமான ரோந்து பணிக்காக நேற்று காலை சென்றனர்.
அப்போது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், கடற்கரை அருகே அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடற்படையினர், ஹெலிகாப்டரில் சிக்கியிருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement