
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தனம் அரசு மாதிரி பள்ளியில், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பிற்காக, நடமாடும் பல் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்கும் புன்னகை திட்டத்தை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.