பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 62 வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், “கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டதால், மதுரை மாநகராட்சியின் 62 வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிலம் வாங்கி தருவதாக முதியவர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், திமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரனை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.