நியூயார்க்: பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது என ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியதாவது: இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் 40,000 மெட்ரிக் டன் கோதுமை, 65 டன் மருந்து பொருட்கள் மற்றும் 28 டன் நிவாரணப் பொருட்கள் உட்பட பல உதவிகளை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கும் நிலமாக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக்கூடாது. பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அப்பாவி மக்களின் வாழ்வில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் கொண்டு வர, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். இதில் இந்தியா பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement