கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இன்னும் பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, தமிழ்நாட்டின் தொழிற்நிறுவங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி குறித்து, தமிழக காவல்துறையும், மாநிலஅரசும் பல்வேறு […]
