வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கயா : பீஹாரில், ராணுவத்தின் பீரங்கியை இயக்கி
பயிற்சியில் ஈடுபட்டபோது, குண்டு இலக்கைத் தாண்டி அருகில் இருந்த
கிராமத்தில் விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர்.
பீஹாரின் கயா
மாவட்டத்தில் நேற்று ராணுவப் பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் சிறிய ரக
பீரங்கிகள் வாயிலாக குண்டுகள் வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த
குண்டுகள் இலக்கு தவறி, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில், அங்கு
வசித்த சூராஜ் குமார், அவரது மனைவி கன்சன் குமாரி மற்றும் அவர்களது உறவினர்
உட்பட மூவர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
![]() |
எங்கள் கிராமம், ராணுவப் பயிற்சி நடக்கும் பகுதிக்கு அருகில் இருந்தாலும், இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை.
ராணுவத்தினரின்
இலக்கிற்கு வெகு துாரத்தில் தான் கிராமம் உள்ளது. ஆனாலும், நேற்று இந்த
அசம்பாவிதம் நடந்து விட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட
வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement