
புனே அருகே உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மாலை 5 மணி அளவில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக சாலையில் பைக் ஓட்டி சாகச செயல்களில் ஈடுபட்டனர்.
மக்கள் வந்து செல்லும் என்ற சாலை என்று எண்ணாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில், அந்த சாலையில் பெரோஸ் பதான் என்ற 31 பெண் ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்போது ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்த ஆர்வத்தில் பெண் வருவதை கவனிக்காமல் பெண்ணின் ஸ்கூட்டி மீது இருவரும் தங்களின் பைக்கை வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் பெரோஸ்சின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இரு வாலிபர்களும் பயந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, அயன் ஷேக், ஜாவித் ஷேக் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.