ஈவிகேஎஸ் இளங்கோவன் vs விஜயதரணி; என்ன பிரச்சினை? ஏன் அப்படி பேசினார்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற

கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்றைய தினம் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகள் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் எம்.எல்.ஏவாக பதவியேற்றது பெருமை தருகின்ற விஷயம்.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். 20 மாத கால திமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இந்த வெற்றியை பார்க்கிறேன். கூட்டணி கட்சியை சேர்ந்த அத்தனை தலைவர்களும், தொண்டர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நான் நடந்து கொள்வேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க முதலிடம் தருவேன் என்று தெரிவித்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தராதது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இங்கே இருக்கிறார். அவர் தான் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பிரதிநிதி. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

கொறடா எங்கே?

கோபண்ணா பங்கேற்றார். கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத தூய தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். என்னை பொறுத்தவரை எங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் வந்து பங்கேற்றதாக தெரிவித்தார். கொறடாவிற்கு அழைப்பு விடவில்லையா எனக் கேட்கப்பட்டது. அதற்கு, யார் அந்த கொறடா? விஜயதரணி. ஆமாம் அவருக்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும்.

வருத்தம் தெரிவிப்பேன்

தவறு செய்து விட்டேன். கண்டிப்பாக அந்த அம்மையாரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தம் தெரிவிப்பேன். அடுத்த முறை மீண்டும் எம்.எல்.ஏவாக பதவியேற்கும் சூழல் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன் என்று கூறினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருப்பது பற்றிய கேள்விக்கு, செல்வப்பெருந்தகை மிகவும் சிறப்பாக துடிப்பாக செயல்படும் இளைஞர்.

மோதல் போக்கு

மதச்சார்பற்ற தம்பிகளில் சாதி மதங்களை ஒழிக்க வேண்டும் என்ற நிலையிலே உறுதியாக இருக்கக்கூடியவர். அவரது செயல்பாடுகள் 20 மாதங்களாக நன்றாக உள்ளது. எனவே அந்த பதவியில் அவரே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த பேட்டியின் மூலம் விஜயதரணிக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதை பார்க்க முடிகிறது.

விஜயதரணி பதில்

இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியிடம் ’சமயம் தமிழ்’ சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், பிரச்சினை எதுவும் இல்லை. சபாநாயகர் அறையில் போதிய இடவசதி இருக்காது. அதனால் அழைப்பு விடுக்காமல் இருந்திருக்கலாம். இதனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை எனப் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.