ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த, 438 பயணியரை, இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜம்மு – காஷ்மீரில் கார்கில் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டன.
இதனால், லே பகுதியைச் சேர்ந்த 260 சுற்றுலா பயணியர், ஸ்ரீநகரில் சிக்கித் தவித்து வருவதாக இந்திய விமானப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பயணியரை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் வகையில், இந்திய விமானப்படை சார்பில் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் வாயிலாக, 260 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, லடாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் கார்கிலைச் சேர்ந்த 165 பயணியர், ஜம்முவில் சிக்கித் தவித்த நிலையில், ராணுவ விமானம் வாயிலாக இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும், ஜம்முவைச் சேர்ந்த 13 பயணியர், கார்கில் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு, ராணுவ விமானம் வாயிலாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement