2018ல் தாயால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி: 4 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட FBI அதிகாரிகள்


அமெரிக்காவில் 2018ம் ஆண்டு காணாமல் போன 8 வயது சிறுமி FBI அதிகாரிகளால் மெக்சிகோவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தாயால் கடத்தப்பட்ட சிறுமி

அமெரிக்காவில் கடந்த 2018ம் ஆண்டு அரன்சா மரியா ஓச்சோவா லோபஸ்(Aranza Maria Ochoa Lopez) என்ற எட்டு வயது சிறுமி வாஷிங்டனில் உள்ள வான்கூவரில் இருந்து அவரது உயிரியல்  தாயால் கடத்தப்பட்டார்.

அரன்சாவை அவரது தாய் எஸ்மரால்டா லோபஸ்-லோபஸ் துஷ்பிரயோகம் செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, வளர்ப்பு தாய் பராமரிப்பில் அரன்சா இருந்து வந்தார்.

2018ல் தாயால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி: 4 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட FBI அதிகாரிகள் | Us Missing Girl Who Vanished In 2018 Found AliveFBI

இந்நிலையில் வான்கூவரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் 2018, அக்டோபர் 25 அன்று, சிறுமி அரன்சா தனது உயிரியல் தாயின் மேற்பார்வைக்கு விடப்பட்டார், அப்போது தாய் லோபஸ் தனது கூட்டாளியுடன் திருடப்பட்ட காரில் மகளை கடத்தி சென்றுள்ளார்.

இதையடுத்து தாய் லோபஸ் செப்டம்பர் 2019 இல் மெக்ஸிகோவின் பியூப்லாவில் கைது செய்யப்பட்டார், அத்துடன் அவருக்கு 2021 இல் இரண்டாம் நிலை கடத்தல், கொள்ளை மற்றும் முதல் நிலை காவலில் குறுக்கீடு செய்ததது போன்ற குற்றத்திற்காக 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த முழு விசாரணையிலும் அரன்சா இருக்கும் இடம் குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை.

2018ல் தாயால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி: 4 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட FBI அதிகாரிகள் | Us Missing Girl Who Vanished In 2018 Found AliveGetty Images

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சிறுமி மீட்பு

 அரன்சா குறித்த விசாரணை நிறுத்தாமல் நடத்தி வந்த FBI முகவர்கள், தீவிர மனித தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

இதன் விளைவாக மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மைக்கோகான் என்ற இடத்தில் சிறுமியை மெக்சிகன் அதிகாரிகள் கண்டுபிடித்து FBI முகவர்களிடம் ஒப்படைத்தனர்.

2018ல் தாயால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி: 4 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட FBI அதிகாரிகள் | Us Missing Girl Who Vanished In 2018 Found AliveGetty Images

இந்நிலையில் 2018 இல் காணாமல் போன எட்டு வயது சிறுமி மெக்சிகோவில் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக FBI முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிறப்பு முகவர் Richard A. Colodi வழங்கிய தகவலில், அரன்சா இப்போது மாநிலங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளார், அவர் அமெரிக்க வாழ்க்கையில் குடியேறும்போது FBI தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.