பீஜீங்:ஏழு ஆண்டுகளுக்கு முன் துாதரக உறவை முறித்துக் கொண்ட ஈரான் – சவுதி அரேபியா நாடுகள், சீனாவின் தலையீட்டால், மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தச் சம்பவம், பல்வேறு நாடுகளில் வாழும், ஷியா பிரிவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா பிரிவினர் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானும் இதற்கு கண்டனம் தெரிவித்தது.
இதனால் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, ஈரான் உடனான துாதரக உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா அரசு அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட சீனா அரசு பேச்சு நடத்தியது.
இதையடுத்து, சவுதி அரேபியா – ஈரான் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இரு நாடுகளும் கூட்டு அறிக்கை வாயிலாக நேற்று உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement