எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை: சிவகங்கையில் இன்று மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வரவுள்ள நிலையில் அவர்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கருப்பு பலூனை பறக்கவிட்டுள்ளார்கள். இன்று  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்  பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளை கொண்டு வந்த நிலையில் அந்த விதிகளை புறம்தள்ளி எடப்பாடி பழனிசாமி கட்சியை அபகரிக்க முயல்வதாகவும், எடப்பாடி பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு கருப்பு பலூனை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற வைக்கப்பட்ட விளம்பர பதாகை கிழிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்படுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.