கனடாவின் புதிய தடை: ரஷ்யாவிற்கு மீண்டும் பங்கமான அடி!


ரஷ்யாவிலிருந்து அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது.

அலுமினியம், எஃகு இறக்குமதிக்கு தடை

உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிக்கக்கூடிய வர்த்தகத்திற்கு மறுபு தெரிவிக்க கனடா தீர்மானித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அனைத்து ரஷ்ய அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது.

“உக்ரைன் இந்தப் போரை வெல்ல முடியும் மற்றும் வெல்ல வேண்டும். புடினின் சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித்தனமான உக்ரைன் படையெடுப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் வருவாயைக் குறைக்க அல்லது தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்,” என்று கனேடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கனடாவின் புதிய தடை: ரஷ்யாவிற்கு மீண்டும் பங்கமான அடி! | Canada Bans Russian Aluminum Steel ImportsREUTERS/Chris Helgren

இந்த தடை முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத தயாரிப்புகளுக்கும் பொருந்தும், மேலும் அலுமினிய தாள்கள், அலுமினிய கொள்கலன்கள் மற்றும் எஃகு டியூப் மற்றும் குழாய்கள் போன்ற பொருட்களின் இறக்குமதியை பாதிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கை

கனடா, அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் சேர்ந்து, உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக கனடா இதுவரை 1,600-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு ஆதரவாக நிதி, இராணுவம் மற்றும் பிற உதவிகளில் 5 பில்லியன் கனேடிய டொலரூக்கு மேல் வழங்கியுள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கனடா 2021-ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து 45 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பினான அலுமினியத்தையும், 213 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பினான எஃகு பொருட்களையும் இறக்குமதி செய்தது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.