திருப்பத்தூர் அருகே சிறுமியை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் முத்துக்குமார்(35). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து முத்துக்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் படம் பிடித்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார், இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி சிறுமியை மிரட்டியும் மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய், அதிர்ச்சடைந்து இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.