
சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜின் பிங்கை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியுள்ளார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே உண்டான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றவாளி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் முன்பில்லாத அளவிற்குக் காற்று மாசுபாடு அதிகரித்து மக்கள் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. தாய்லாந்தில் சுமார் 1.32 மில்லியன் மக்கள் இந்த ஆண்டு காற்று மாசுபாட்டினால் நோய்வாய்ப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதானா ராஜ் சிங் என்ற வாலிபர், அங்கு வங்கி ஊழல் மற்றும் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அவரது தம்பியான இளவரசர் எட்வர்ட் -ற்கு ‘டியூக் ஆஃப் எடின்பர்க்’ பட்டத்தை வழங்கினார் . இதற்கு முன்னதாக இந்த பட்டத்தைப் பெற்றிருந்த மறைந்த இளவரசர் பிலிப் மற்றும் அவரது மனைவியான எலிசபெத் மகாராணியின் ஆசையின்படி இந்த பட்டம் எட்வர்ட்-க்கு வழங்கப்பட்டது.

பிரேசிலில் உள்ள ஒரு பெண் தன் பக்கத்து வீட்டாரின் ‘நீனா’ என்ற நாய் தொடர்ந்து குரைத்து வந்ததால் அதை உயிருடன் புதைத்துள்ளார். பிளானுரா முனிசிபாலிட்டியில் நடந்த இந்த சம்பவத்தின் குற்றவாளியான 82 வயது பெண் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நியூயார்க்கில் ராப் பாடகி GloRilla -வின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஐரோப்பா, அமெரிக்காவைத் தொடர்ந்து பெல்ஜியம், அரசு ஊழியர்களின் தொலைப்பேசிகளிலிருந்து டிக் டாக் செயலியை அகற்ற முடிவு செய்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், 63 வயதான லி கியாங்கை, சீனாவின் நாடாளுமன்ற வருடாந்திர கூட்டத்தில் பிரதமராக நியமித்துள்ளார்.

குடியேற்றச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களை முறையாகப் பயன்படுத்த இரு கட்சி மசோதா அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.