தமிழகத்தில்  6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது..

தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வைக்காயிலும், தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கிலும், அபாயகரமான 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ள அதிக அளவில் பயன்படுத்தப்படும் எலி பேஸ்ட்டை ஏற்கனவே தமிழக அரசு தடை செய்து உள்ள நிலையில், மேலும், 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மோனோ குரோட்டோபாஸ், ப்ரோஃ பெனோபாஸ், அசிபேட், குளோர்பைரி ஃபாஸ் உள்ளிட்ட ஆறு பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.