திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெக்கானிக் கடையில் தீடிரென தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருவேங்கடபுரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் தீடிரெனதீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருவேங்கடபுரத்தில் கந்தன் என்பவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கந்தனும் அவர் உடன் கடையில் பணியாற்றும் ஹரி ஆகிய இருவரும் இருசக்கர பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டியிருந்தனர்.

அப்பொழுது ஒரு இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி பெட்ரோல் டேங்க் மீது வெடித்து சிதறியது. தீ மளமளவென பற்றி மற்ற இருசக்கர வாகனங்களில் பரவியது. இதன் காரணமாக கடையில் இருந்த இருவரும் அலறியடித்து வெளிய வந்தனர். உடனே தீயணைப்புத்துறைக்கும் காவல்துறைக்கும் உடனே தகவல் தெரிவித்துள்ளனர். மெக்கானிக் கடையில் இருந்த இருசக்கர வானங்களில் இருந்த பெட்ரோல் மற்றும் வண்டிகளில் உற்றுவதற்கு வைத்திருந்த ஆயில் உள்ளிட்ட பொருட்களால் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி  தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் அருகில் இருந்த கடைகளில் லேசாக தீ பரவியது மீண்டு பற்றி எறிய தொடங்கிய தீ அருகில் இருந்த கடையில் பரவியது அதிலும் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை கொண்டு வேகமாக தீயை அனைத்தனர். இந்த தீ  விபத்தால் கடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அதே போல் அருகில் இருந்த பேன்சி ஸ்டோர் கடையில் ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பாலானது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.