பிரித்தானியாவில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து: இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டையில் சோகம்


பிரித்தானியாவில் வால்சல் இரவு விடுதியில் 29 வயதுடைய நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கத்திக்குத்து

பிரித்தானியாவின் வால்சல்(walsall) நகர மையத்தில் உள்ள வலேஷாவின்(Valesha) இரவு விடுதியில் யாரோ கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த 29 வயதுடைய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரித்தானியாவில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து: இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டையில் சோகம் | Uk Man 29 Stabbed To Death At Walsall Nightclub BPM

ஆனால் காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இளைஞர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கத்திக்குத்துக்கு முன்பு ஏற்பட்ட சண்டை

இந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அதிகாரிகள் கத்திக்குத்துக்கு முன்பு சண்டை நடைபெற்று இருப்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து: இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டையில் சோகம் | Uk Man 29 Stabbed To Death At Walsall NightclubNewport Street, Walsall

கொலைக்கு காரணமானவர்களை பிடிப்பதே எங்கள் முதல் முன்னுரிமை என்று தெரிவித்துள்ள காவல்துறை, என்ன நடந்தது என்பதைப் பார்த்தவர்கள் அல்லது படம்பிடித்திருப்பவர்களிடமிருந்தும் நாங்கள் இன்னும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்த சம்பவத்தின் போது இரவு விடுதியில் இருந்தவர்களை விசாரணைக்கு முன் வருமாறு பொலிஸார் வலியுறுத்தி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.