ராணுவ வீரர் மனைவியின் உறுப்புகள் தானம்

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(40) ராணுவ வீரர். அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா(37). இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சத்யா கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தததால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சத்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் இதயம் எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், நுரையீரல் காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் குமரன் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் ராமச்சந்திரா மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. ராணுவ வீரர் செந்தில்குமார் கூறுகையில், ‘வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்து ரத்ததானம், கண்தானம் போல, உடல் உறுப்பு தானமும் செய்ய வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.