67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம்


67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஐரோப்பாவில் ஏல விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 டைரனோசொரஸ் எலும்புக்கூடு ஏலம்

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Zurich-ல் ஏலத்துக்கு வர இருப்பதாக கொல்லர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரினிட்டி என்று அழைக்கப்படும் எலும்புக்கூடு, சுமார் 3.9 மீட்டர் (12.8 அடி) உயரம் கொண்டது. இது ஆறு முதல் எட்டு மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்ய ($6.5-8.7 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம் | 67 M Year Old T Rex Skeleton Auctioned In EuropeT-rex skeleton

டிரினிட்டி என்பது “இருப்பதில் உள்ள மிகவும் கண்கவர் டி-ரெக்ஸ் எலும்புக்கூடுகளில் ஒன்றாகும், அத்துடன் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவமாகும் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பாவில் முதல் முறை

இத்தகைய பிரம்மாண்ட டைரனோசொரஸ்-ரெக்ஸ் எலும்புக்கூடு விற்பனை ஐரோப்பாவில் முதல் முறையாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, உலகளவில் இது மூன்றாவது முறையாகும்.

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம் | 67 M Year Old T Rex Skeleton Auctioned In Europe Getty Images

இந்த டிரினிட்டி எலும்புக்கூடு மூன்று டி-ரெக்ஸ் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட எலும்புப் பொருட்களால் ஆனது.
 

டிரினிட்டி எலும்புக்கூடு விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை மிகக் குறைந்த மதிப்பீடு என்று நம்புவதாக கொல்லரில் உள்ள இயற்கை வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு பொறுப்பான கிறிஸ்டியன் லிங்க் தெரிவித்துள்ளார். 

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம் | 67 M Year Old T Rex Skeleton Auctioned In EuropeChristie’s



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.