சிவகங்கை: நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காரைக்குடியில் இறங்கிய நகை வியாபாரி ரவிச்சந்திரனை போலீஸ் என கூறி காரில் அழைத்து சென்ற மர்மநபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் லேனா வனப்பகுதியில் நகை, பணத்தை பறித்து கொண்டு கீழே இறக்கிவிட்டு தப்பியோடினர்.
