பலுசிஸ்தானில் வலுக்கும் போராட்டம்… சாமாதானப்படுத்த களம் இறங்கியுள்ள அரசு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், நாளுக்கு நாள், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதை அடுத்து பலுச் மாகாண முதல்வர் மிர் அப்துல் குதுஸ் பிசென்ஜோ, தீர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், போராட்டத்தை கை விட்டு, அனைத்து பிரச்னைகளை தீர்க்கவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மலைவாழ் மக்கள் தங்களை பலுசிஸ்தான் மக்களின் நலன் விரும்பிகளாகக் கருதினால், அந்த மாகாணத்தின் பல தசாப்த காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

துறைமுக நகரமான குவாடருக்கு வருகை தந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், ஏனென்றால் இது ஒரு பொருத்தமான தீர்வைக் கண்டறிய சரியான வழி. “துப்பாக்கியை எடுப்பதற்குப் பதிலாக, பலுசிஸ்தான் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எங்களுக்கு உதவுங்கள்” என்று மிர் பிசென்ஜோ கூறியதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.

பலுஸ்சிஸ்தானை மேம்படுத்த அரசு முன்னுரிமை

பலுசிஸ்தானில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை எனவும், மாகாணத்தில் உள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக கீழ்மட்ட ஊழியர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வளர்ச்சிப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இ-டெண்டர் முறையை அரசு தொடங்கியுள்ளது என்றார். அத்தகைய அமைப்பை அமைப்பது சிபாரிசு கலாச்சாரத்தை ஒழித்துவிடும் என்றும், தகுதியின் அடிப்படையில் அனைத்து டெண்டர்களும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | 104 பயணிகளுடன் மாயமான ரயில்! 100 ஆண்டுகளாக தொடரும் தேடுதல் வேட்டை!

நிதி ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை

மிர் அப்துல்  மேலும் கூறுகையில், ‘நாங்கள் பிரச்சனையை திறமையாக கையாண்டு, சர்வதேச நீதிமன்றங்கள் விதித்த கடுமையான அபராதத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டைக் காப்பாற்றியுள்ளோம்’ என்றார். டான் அறிக்கையில், வரிகள், ராயல்டிகள் மற்றும் பிற பங்குகள் பலுசிஸ்தானை அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக நிலையானதாக மாற்றும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நித்தியானந்தா விடு தூது… சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.